அனிருத், அன்பறிவை அடுத்து 'தலைவர் 171' படத்தில் இன்னொரு 'விக்ரம்' பிரபலம்.. யார் அவர்?

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு குறித்து பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் ’தலைவர் 171' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஸ்டென்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஆகிய இருவரும் ஏற்கனவே ’தலைவர் 171' படத்தில் இணைந்துள்ளனர் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

தற்போது ’விக்ரம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கிரிஷ் கங்காதரன் ’தலைவர் 171' படத்தில் இணைய இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ’விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படியே ’தலைவர் 171' படத்திலும் இணைந்து வருவது இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்வதாக தெரிகிறது.

மேலும் ரஜினி ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இம்மாதம் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.