அஜித் ரீல் மகளை அடுத்து ஹிப்ஹாப் தமிழா படத்தில் இணைந்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகை காஷ்மீரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ, வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழாவின் 7வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அவரே ஹீரோவாக நடித்து இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Talented actress @kashmira_9 onboard for @VelsFilmIntl's #HHT7 starring & Music by @hiphoptamizha
— Vels Film International (@VelsFilmIntl) December 20, 2022
Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/xjjLWf9Wja
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com