பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்.. அனன்யாவை அடுத்து திடீரென வெளியேறிய போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Monday,October 09 2023]

பிக் பாஸ் வீட்டில் நேற்று அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்ட திடீரென இன்னொரு போட்டியாளர் வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்.

மேலும் போட்டியாளர்களில் ஒருவரான பவா செல்லதுரை பிக் பாஸ் இடம் தான் இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றும், தான் வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரை பிக் பாஸ் சமாதானப்படுத்தி தொடர்ந்து விளையாடுங்கள் என்று கூறினார் என்பதும் தெரிந்ததே.

ஆனால் திடீரென பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னால் இந்த சூழ்நிலையில் தொடர்ந்து விளையாட முடியாது என்றும், எனக்கு நெஞ்சு வலி உள்பட உடல்நிலை சரியில்லாததால் தயவு செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்றும் பவா செல்லதுரை மீண்டும் கன்ஃபக்சன் அறைக்கு வந்து பிக்பாஸ் இடம் கூறுகிறார்.

உடனே பிக் பாஸ் உங்கள் உடல் நிலையை கணக்கில் கொண்டு உங்களை வெளியே அனுப்ப அனுமதிக்கிறேன் என்று கூறினார். இந்த அறையில் இருந்தே நீங்கள் வெளியே செல்லலாம் என்றும் லக்கேஜ் எல்லாம் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் என்றும் கூறினார் சக போட்டியாளர்களுடன் சொல்லிவிட்டு போகவா என பவா செல்லதுரை கேட்டபோது இல்லை, நான் சொல்லி கொள்கிறேன்’ என்று பிக் பாஸ் கூறினார்.

மேலும் ’நீங்கள் இந்த நிகழ்ச்சியில் பெரும் பங்கு வகுத்தீர்கள், அதற்கு நன்றி, என பிக் பாஸ் கூற, நானும் இந்த நிகழ்ச்சிக்கு கனவுடன் தான் வந்தேன், என்னை எல்லோரும் அப்பா மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எனினும் உடல்நிலை காரணத்தினால் தான் நான் வெளியேறுகிறேன்’ என்று பவா செல்லதுரை விளக்கம் அளித்தார்

இதையடுத்து வெளியே செல்லும் கதவு திறக்கப்பட பவா செல்லத்துரை வெளியேறிவிட்டார். இது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.