அமலாபாலை அடுத்து ஆடையின்றி நடித்த பிக்பாஸ் புகழ் நடிகை

  • IndiaGlitz, [Friday,January 31 2020]

பிரபல நடிகை அமலாபால் சமீபத்தில் வெளியான ’ஆடை’ என்ற படத்தில் ஆடையின்றி நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நடிகையும் ஆடையின்றி நிர்வாணமாக நடித்துள்ள செய்தி வெளிவந்துள்ளது

கமலஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இருப்பினும் இவர் பிக்பாஸ் நிர்வாகத்தின் ஆதரவால் கடைசி வரை தாக்குபிடித்து ரன்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா தற்போது PUBG என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலையில் துணிச்சலாக அந்த காட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று இந்த நிர்வான காட்சி படமாக்கப்பட்டதாகவும், இந்த காட்சியை படமாக்கி உடன் படக்குழுவினர் இந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகவும், துணிச்சலாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுனன், ஐஸ்வர்யா தத்தா, சாந்தினி, அனிதா நாயர், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது