அஜித் பட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் வெங்கட்பிரபுவின் தரமான அறிவிப்பு.. போட்டி அப்டேட்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்க இருக்கும் 63 வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ’குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழுவினர், இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்தனர்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்ததால் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது என்பதும் நேற்று முதல் இந்த படத்தின் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் படத்தின் அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நிமிடங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் ’கோட்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாகவும் அது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே அஜித், விஜய் ஆகிய இருவரில் ஒருவர் பட அப்டேட் வந்தால், உடனே அடுத்த நாள் இன்னொருவரின் பட அப்டேட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்தது. அந்த வகையில் வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு அஜித் 63வது படத்தின் போட்டி அறிவிப்பாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு சொன்ன அப்டேட் என்னவாக இருக்கும்? எப்போது வரும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Very soooooon #GOAT and it will be worth it😁
— venkat prabhu (@vp_offl) March 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com