'ஏகே 62' படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படமும் டிராப்?
- IndiaGlitz, [Wednesday,March 29 2023]
அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ என்ற திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ’ஊர்க்குருவி’ என்ற திரைப்படம் உருவாக இருந்தது என்பதும் இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை ட்ராப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக இந்த படத்தை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முன்னதாக கவின் நடிக்க இருந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அஸ்வின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.