close
Choose your channels

'ஏகே 63' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. 'ஏகே 64' இயக்குனர் இவரா? அடித்துவிடும் இணையவாசிகள்..!

Thursday, October 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் எப்போதும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட பாதி முடிந்த பின்னர் தான் அடுத்த படம் குறித்து யோசிப்பார் என்பதும் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிந்ததே.

ஆனால் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியே எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் அதற்குள் ’அஜித் 64’ படத்தின் இயக்குனர் குறித்த தகவலும் இணையத்தில் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியில் எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையவாசிகள் இஷ்டத்துக்கு அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்களை வைரல் ஆக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அஜித்தின் அடுத்த படம் குறித்த உண்மையான தகவல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் நெருக்கமானவர்களிடம் இது குறித்து விசாரித்த போது அஜித்தின் அடுத்த படம் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment