'ஏகே 61' படப்பிடிப்பு முடிந்ததும் அஜித்தின் மெகா திட்டம்: அப்போ 'ஏகே 62' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் கிடைத்த ஓய்வு நேரத்தில் தற்போது இங்கிலாந்து நாட்டில் அஜித் பைக் பயணம் சென்றுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தற்போது அவர் பெல்ஜியம் உள்பட ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மீண்டும் வெளிநாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்ய அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வதே அவரது இலக்கு என்றும் கூறப்படுகிறது.

இந்த பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் தான் அவர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ’ஏகே 62' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கவின் நடித்த 'டாடா' படத்தின் செம அப்டேட்: வைரல் வீடியோ

நடிகர் கவின் 'டாடா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இங்கிலாந்தை அடுத்து அஜித் சென்ற ஐரோப்பிய நாடு: வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டுக்கு பைக் பயணம் சென்றார் என்பதும் அவரும் அவருடைய குழுவினரும் இங்கிலாந்து நாட்டில் எடுத்துக்கொண்ட

கமல் சொன்ன டைம் டராவல்  கதை: இயக்க போவது இவரா?

பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் டைம் டிராவல் பற்றிய கதை ஒன்றை தன்னிடம் சொன்னதாக பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த படத்தை அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக

'தளபதி 66' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும்'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? விரைவில் ஹீரோயின் ஆவார்களா?

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை மதுபாலாவின் மகள்கள் தனது தந்தைக்கு வாழ்த்து கூறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபாலா பதிவு செய்துள்ளார்.