அஜித்துக்கு அடுத்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.. லோகேஷ் கனகராஜ் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலத்தில் 100வது படம், 200வது படம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு மாஸ் ஹீரோ 50 படங்களை கடந்தாலே மிகப்பெரிய சாதனை என்று கூறப்படுகிறது.
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே மாஸ் ஹீரோக்கள் நடித்து வருவதால் 50 படங்களை தாண்டினாலே அது ஒரு சாதனையாக கருதப்படும் நிலையில் அந்த 50வது படத்தை வெற்றி படமாக்க அனைத்து ஹீரோகளும் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை அஜித் மட்டுமே தனது 50 வது படமான ’மங்காத்தா’ படத்தை சூப்பர் ஹிட் படமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்க்கும்போது இந்த படமும் ஒரு சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அஜித்தை அடுத்து 50 வது படத்தை வெற்றி படமாக கொடுத்துள்ள விஜய் சேதுபதிக்கு திரை உலகில் உள்ள பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது பட வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் நிதிலன் சாமிநாதன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக எனது வாழ்த்துக்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Thunderous response everywhere for #Maharaja!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 14, 2024
Hearty Congratulations on your 50th film @VijaySethuOffl na! Keep inspiring us!! 🤗
So happy for you @Dir_Nithilan anna ❤️ One more feather to the crown @philoedit 🔥 @anuragkashyap72 I'm sure you were terrific sir!🤗…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments