close
Choose your channels

அஜித் மட்டுமல்ல,  கார் ரேசுக்கு தயாராகும் தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

Sunday, October 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் ரேஸ் போட்டியில் அஜித்தும் அவருடைய அணியும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அஜித்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கார் ரேஸிங் குறித்த விஷயங்களை கேட்டறிந்து, அதற்கேற்ப உடை அணிந்து கார் ரேஸ் போட்டியில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. மேலும், இந்த பதிவில் "அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன்" என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக குஷ்பூ, சாந்தனு, பவித்ரா லட்சுமி, ராதிகா சரத்குமார், சோம் சேகர், ஐஸ்வர்யா, லட்சுமி ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பதிவிற்கு லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ மற்றும் ’பேபி ஜான்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment