அஜித் மட்டுமல்ல,  கார் ரேசுக்கு தயாராகும் தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் ரேஸ் போட்டியில் அஜித்தும் அவருடைய அணியும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அஜித்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கார் ரேஸிங் குறித்த விஷயங்களை கேட்டறிந்து, அதற்கேற்ப உடை அணிந்து கார் ரேஸ் போட்டியில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. மேலும், இந்த பதிவில் அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன் என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக குஷ்பூ, சாந்தனு, பவித்ரா லட்சுமி, ராதிகா சரத்குமார், சோம் சேகர், ஐஸ்வர்யா, லட்சுமி ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பதிவிற்கு லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ மற்றும் ’பேபி ஜான்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரம் எலிமினேஷன் யார்? ஜாக்குலின் கணிப்புக்கு விஜய் சேதுபதி பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் இந்த வாரமே எலிமினேஷன் உண்டு என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 24 மணி நேர எலிமினேஷன்

மகன்கள் கையால் ஊழியர்களுக்கு ஆயுதபூஜை பரிசுப்பொருட்கள்.. நயனின் க்யூட் வீடியோ..!

நடிகை நயன்தாரா தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தன்னுடைய மகன்கள் கையால் ஆயுத பூஜை பரிசு பொருட்கள் வழங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்த வச்சிட்டியே பரட்ட.. பவித்ராவை எல்லோர் முன்னிலையில் போட்டு கொடுத்த விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ஒருவரை பற்றி பேசும்போது பூசி மெழுகாமல், மறைமுகமாக கூறாமல் நேரடியாக முகத்துக்கு நேரில் அவருடைய தவறை கேள்வி கேட்கும்

உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்.. 'கோட்' வசூலை மிஞ்சிய லேட்டஸ்ட் ரிலீஸ் படம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த படம் உலகம் முழுவதும் 455 கோடி

வீக் போட்டியாளர்கள்.. சாச்சனாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வேற லெவல் புரமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் நாளே செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக