அஜித்தை அடுத்து விளையாட்டுத்துறையில் அசத்தும் தமிழ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு துறைகளிலும் சாதனை செய்து பதக்கங்களை குவித்து வருகிறார் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் அஜித்தை பின்பற்றும் தமிழ் நடிகை ஒருவரும் விளையாட்டுத் துறையில் அசத்தியுள்ள செய்தி வெளியாகியுள்ளது
சமீபத்தில் வெளியான செல்வராகவனின் ’நெஞ்சம் மறப்பதில்லை’ விஷாலின் ’சக்ரா’ உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகை ரெஜினா கஸன்ட்ரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற துடுப்பு கொண்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் ரெஜினா முதலிடம் பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ரெஜினா, இந்த விளையாட்டு போட்டியில் தான் முதலிடம் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த போட்டியில் தனக்கு ஒத்துழைப்பாக இருந்த பயிற்சியாளர் சேகர் அவர்களுக்கு எனது நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை ரெஜினா தற்போது ’ஆச்சாரியா’ ‘கசடதபற’ ’சூர்ப்பனகை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com