close
Choose your channels

ஐஸ்வர்யாவை அடுத்து மகத்துடன் ஜோடி சேர்ந்த யாஷிகா

Wednesday, November 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மகத் நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஒப்பந்தமாகியுள்ளனர்.

இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ள படம் ஒன்றில் மகத்- ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம்,. இந்த நிலையில் இயக்குனர் கண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கடேஷ் என்பவர் இயக்கவுள்ள த்ரில் படத்தில் மகத் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே இருவரும் நெருக்கமாகவும், காதலிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் திரையில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment