ஆதித்ய கரிகாலனை அடுத்து வந்தியத்தேவன்: 'பொன்னியின் செல்வன்' அட்டகாசமான போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை அதே டைட்டிலில் பிரபல இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் நாயகனான வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்திக்கின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக குதிரையில் கார்த்தி உட்கார்ந்திருக்கும் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
The Prince without a kingdom, the spy, the swashbuckling adventurer...here comes Vanthiyathevan! #PS1 ?? @LycaProductions #ManiRatnam pic.twitter.com/bitFUgGU5O
— Madras Talkies (@MadrasTalkies_) July 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com