அதிதியை அடுத்து சாண்டி மாஸ்டருடன் வேற லெவலில் டான்ஸ் ஆடும் 'விருமன்' நடிகை!

  • IndiaGlitz, [Monday,September 19 2022]

இயக்குனர் முத்தையா நடிப்பில் கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனரின் மகள் அதிதி ஷங்கர், சமீபத்தில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பதும் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டருடன் அதிதியை அடுத்து மற்றொரு ’விருமன்’ நடிகை செம நடனமாடி உள்ள வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் தான் ’விருமன்’ படத்தில் அதிதிக்கு தோழியாக நடித்திருந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா என்பதும் அவர்தான் தற்போது சாண்டியுடன் செம நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ’விருமன்’ படத்தின் மூலம் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில படங்களில் நடிக்க அவர் வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.