நடிகையை அடுத்து மற்றொரு துறையில் காலடி எடுத்து வைத்த அதிதி ஷங்கர்: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் சமீபத்தில் நடிகையாக அறிமுகமானார் என்பதும் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் அதிதி ஷங்கர் தான் நாயகி என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நடிகையை அடுத்து இன்னொரு துறையிலும் கால் வைத்துள்ளதாக அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது நீண்டநாள் கனவு என்பது ஒரு பாடகியாக வேண்டும் என்பது தான் என்றும், அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும், இசையமைப்பாளர் தமன் அவர்களின் இசையில் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
வருண்தேஜ் அடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘கானி’ என்ற திரைப்படத்தில் இடம்பெறும் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை பாடியிருப்பதாகவும், என்னை நம்பி இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அதிதி ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். நடிகையை அடுத்து பாடகியாகவும் மாறியுள்ள அதிதி ஷங்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற தமன், தற்போது ஷங்கர் மகளுக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MY SINGING DEBUT✨????
— Aditi Shankar (@AditiShankarofl) February 6, 2022
Waited so long to share this with you all. Another dream come true. @MusicThaman sir Thank you so much for trusting me and giving me this opportunity. Hope you guys like it♥️????#ghani #romeojuliet #singingdebut pic.twitter.com/JOboB9VaMM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments