பிரபல நடிகரின் படத்திற்காக பாடல் பாடிய சித்தார்த்

  • IndiaGlitz, [Saturday,March 09 2019]

விஜய், தனுஷ், சிம்பு உள்பட தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது தெரிந்ததே. அந்த வகையில் தன்னுடைய படங்களில் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடல்கள் பாடி வரும் நடிகர் சித்தார்த், தற்போது ஆறு வருடங்களுக்கு பின் தெலுங்கு படம் ஒன்றுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

நடிகர் சந்தீப்கிஷான் நடித்து வரும் தெலுங்கு படமான நினு வீடனி நீடனு' (Ninu Veedani Needanu) என்ற படத்தில் 'எக்ஸ்கியூஸ் மி ராட்சசி' என்ற பாடலை சித்தார்த் பாடினார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட போது இந்த படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சந்தீப் கிஷான் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.தமன் இசையில் சாம்ராட் வரிகளில் உருவான இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகவுள்ளது.

தமிழில் 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷான் ஜோடியாக அனுயாசிங் நடித்துள்ளார்,. இந்த படம் தமிழில் 'கண்ணாடி' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

More News

'நீயா 2'வின் ஆரம்ப புள்ளி 'நாகினி' தான்: இயக்குனர் எல்.சுரேஷ் 

ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிய 'நீயா 2' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சர்ட்: என்ன ஆச்சு தமிழ் சினிமா டைட்டிலுக்கு

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தமிழ் சினிமாவின் டைட்டில்களே கவிதை போன்று இருக்கும்.

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த அஜித், விஜய் படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், தற்போதைய இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவில்லை

சீமானை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும்போது அவருடைய இல்லத்திற்கே வந்து ஆதரவு கொடுத்தவர் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

ஆர்யா-சாயிஷா திருமணத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!

ஆர்யா-சாயிஷா இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இம்மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே.