close
Choose your channels

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு    

Friday, June 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் தனது திறமையான திரைக்கதையை வைத்து இயக்கிய திரைப்படம் '8 தோட்டாக்கள்'. துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும், அந்தத் துப்பாக்கியைக் கொண்டு அசாதாரண சம்பவங்களை அரங்கேற்றும் சாதாரண மனிதனையும் மையமாகக் கொண்டு த்ரில்லர் திரைக்கதையை இந்த படத்தில் இயக்குனர் அமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்ரீகணேஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு 'குறுதி ஆட்டம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதர்வா ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அதர்வா நடிப்பில் 'செம போத ஆகாதே' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'இமைக்கா நொடிகள்' மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் '100' மற்றும் 'பூமராங்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஸ்ரீணேஷ் படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment