டிக்கெட் டு பினாலே டாஸ்க்; 8 சுற்றுகளின் முடிவில் முதலிடம் இவருக்கா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ‘டிக்கெட் டு பினாலே’ டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ‘வாக்கியம் பொருத்துதல்’ என்னும் டாஸ்க் முடிவுக்கு வந்தது. இந்த டாஸ்க்கில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் வாக்கியம் பெற்றதன் அடிப்படையில் ரேட்டிங் கொடுக்கப்பட்டது.

அதில் ஆரிக்கு வழக்கம்போல் கடைசி இடம் கிடைத்ததால் அவருக்கு ஒரு புள்ளியும், பாலாவுக்கு 2 புள்ளிகளும், ரம்யாவுக்கு 3 புள்ளிகளும், ஷிவானிக்கு 4 புள்ளிகளும், ரியோவுக்கு 5 புள்ளிகளும், கேபிக்கு 6 புள்ளிகளும், சோம்சேகருக்கு 7 புள்ளிகளும் கிடைத்துள்ளது. சோமுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை 7 புள்ளிகள் கிடைத்ததால் இதுவரை நடந்த மொத்த சுற்றில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் இதுவரை நடந்த 8 சுற்றுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைத்த புள்ளிகளின் விபரம் பின்வருமாறு:

சோம்சேகர்: 39
ரியோராஜ்: 37
பாலாஜி: 32
ஷிவானி: 32
ரம்யா: 31
கேபி: 28
ஆரி: 25