696 நாட்களுக்கு பின் மீண்டும் கேப்டனாகிய தல தோனி
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார். 696 நாட்களுக்கு பின் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டிகளில் வென்ற இந்தியா, சூப்பர் 4 சுற்றிலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டதால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை நல்ல வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்டக்கது.
எனவே இன்றைய போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியின் கேப்டனாக மீண்டும் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோனி கேப்டனாக பொறுப்பேற்கும் 200வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கேப்டனாக விளையாடிய தோனி இந்திய அணிக்காக 110 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். 74 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டி டை ஆகவும், 11 போட்டிகள் முடிவு இல்லாமல் நின்றது. மொத்தத்தில் ஒரு கேப்டனாக தோனியின் வெற்றி சதவிகிதம் 55.28 என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com