ஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சமூக இணையதளங்கள் மூலம் வாழ்த்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர்
இந்த நிலையில் இன்று காலை முதலே சச்சினின் மும்பை இல்லத்தின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் குவிந்தனர். தனக்காக காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த சச்சின், ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சச்சின் பொறுமையாக ரசிகர்களுக்கு செல்பி போஸ் கொடுத்ததோடு, ஒருசிலருக்கு ஆட்டோகிராப் போட்டு தந்தார்.
சச்சின் பிறந்த நாளை முன்னிட்டு #GodOfCricket என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகியும் ரசிகர்களிடம் அதே மதிப்பு, மரியாதையை அவர் பெற்றுள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
After 6 Yrs Retirement ????
— Mumbai Indians TN (@MumbaiIndiansTN) April 24, 2019
Love Is Never Replacement ????
Madness outside @sachin_rt 's house at Mumbai to greet master on his birthday #HappyBirthdaySachin pic.twitter.com/RGS8h8CW4L
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments