ஐபிஎல் 2020: 50 போட்டிகள் முடிந்தும் உறுதி செய்யப்படாத பிளே ஆப் அணிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாக தொடங்கினாலும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் உள்ள இளைஞர்கள் தங்களுடைய ஸ்பார்க்கை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் அதிரடி ஆட்டங்கள், அசரவைக்கும் சிக்ஸர்கள் இந்த ஆண்டு அதிகம் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்றுடன் ஐபிஎல் போட்டியில் 50 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. ஆனால் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மும்பை மட்டுமே தகுதி பெற்றுள்ளது என்பதும் சென்னை மட்டுமே தகுதி பெறாத அணி என்பதும் தெரியவந்துள்ளது
பிளே ஆப் சுற்றில் தகுதிபெறும் இன்னும் மூன்று அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாக தெரியாத வகையில் உள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகளே மீதமிருக்கும் நிலையில் அந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் அணிகள் பெரும் ரன்ரேட் அடிப்படையில்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அடுத்த மூன்று அணிகள் குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது
50 போட்டிகள் முடிந்தும் பிளே ஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி மட்டுமே தகுதி பெற்று உள்ளதால் அடுத்து வரும் 6 போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 12 போட்டிகளில் விளையாடிய பெங்களூர், டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளையும், 12 போட்டியில் விளையாடிய ஐதராபாத் அணி 10 புள்ளிகளும் பெற்றுள்ளன. 13 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த ஆறு அணிகளில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்று அணிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout