41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

டோக்கியோவில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. வெண்கல பதக்கத்திற்கான இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணியினர் மிக அபாரமாக விளையாடி வந்தனர் என்பதும் முதல் பாதியிலேயே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு கட்டத்தில் ஜெர்மனி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டதால் 3-3 என்ற சம நிலையில் இருந்தது.

அதனை அடுத்து சுதாரித்த இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களையும், ஜெர்மனி அணி ஒரு கோல் போட்டதை அடுத்து இந்தியா ஜெர்மனியை 5- 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

கடந்த 1980ஆம் ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றதில்லை என்ற நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெண்கலம் வென்று உள்ளதை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியா தற்போது 3 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி என 4 பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.