36 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் கிளாசிக் திரைப்படம் ரீ ரிலீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த கிளாசிக் திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் எல் வைத்தியநாதன் இசையில் உருவான திரைப்படம் ’பேசும் படம்’. இந்த படம் ரூ.35 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும், இந்த படம் வசனமே இல்லாமல் வெளிவந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை 36 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது

ஏற்கனவே கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலிஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’பேசும் படம்’ திரைப்படமும் அதே போல் மிகச் சிறந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ திரைப்படமும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யுடன் இவரையும் இணைத்து படம் பண்ண வேண்டும்: அட்லீயின் வேற லெவல் கனவு..!

அட்லி இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடியில் 'ஜவான்' வேற மாதிரி இருக்கும்: அட்லி கூறிய ஆச்சரிய தகவல்..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது

வேற பெண்ணே கிடைக்கலையா? கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..!

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்களை பார்த்து ஒரு சில நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து

இன்று 'லியோ' நடிகையின் பிறந்தநாள்.. இன்றைய அப்டேட் இவரது கேரக்டர் தானா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் அப்டேட்டுகள் இன்று முதல் வெளியாகும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில்  இன்னும் சில மணி நேரத்தில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று

சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்.. விரைவில் டிரைலர்..!

முத்ரா பிலிம் பேக்டரி தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.