36 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் கிளாசிக் திரைப்படம் ரீ ரிலீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த கிளாசிக் திரைப்படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் எல் வைத்தியநாதன் இசையில் உருவான திரைப்படம் ’பேசும் படம்’. இந்த படம் ரூ.35 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும், இந்த படம் வசனமே இல்லாமல் வெளிவந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை 36 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது
ஏற்கனவே கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலிஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’பேசும் படம்’ திரைப்படமும் அதே போல் மிகச் சிறந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ திரைப்படமும் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Pushpak #Pesumpadam, a pioneer in silent black comedy and an iconic masterpiece of Indian cinema, will be re-released in theatres soon. #Ulaganayagan #KamalHaasan #SingeethamSrinivasaRao@ikamalhaasan pic.twitter.com/X3LKO1pMnZ
— Raaj Kamal Films International (@RKFI) September 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout