35 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கும் 'முதல் மரியாதை' நடிகர்

  • IndiaGlitz, [Sunday,March 01 2020]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் ‘முதல் மரியாதை’. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன் மற்றும் ரஞ்சனி இளஞ்ஜோடிகளாக நடித்திருப்பார்கள்.

இந்த நிலையில் 35 வருடங்களுக்கு பின் ‘முதல் மரியாதை’ நடிகர் தீபன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி தற்போது கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் தீபனை தற்செயலாக விமான நிலையத்தில் பார்த்த அறிமுக இயக்குனர் ஹெமம்பர் ஜேஸ்தி தான் இயக்கவிருக்கும் ’C/O காதல்’ என்ற படத்தில் நடிக்க அவரை நடிக்க அணுகியதாகவும், முதலில் மறுப்பு தெரிவித்த தீபன் அதன்பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தீபன் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும், அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையை மாற்றியவுடன் அவர் இந்த படத்தின் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியதாகவும் இயக்குனர் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் தீபனுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி சோனியா கிரி என்பவர் நடித்து வருகிறார். ஃபேஸ்புக்கில் அவரை பார்த்து இந்த படத்தில் நடிக்க அணுகியதாகவும், கேரளாவில் மாவட்ட அளவில் அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பாளராக உள்ள சோனியாவும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் ஹெமம்பர் ஜேஸ்தி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

More News

படுக்கைக்கு அழைத்த விவகாரம்: வரலட்சுமி அதிர்ச்சி தகவல்

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகை வரலட்சுமி பரபரப்பான பதில் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விஜய் பெற்ற ஸ்பெஷல் முத்தம்: வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: குவியும் பாராட்டு

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பரவி பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது

சகோதரர் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த ஷாலினி அஜித்!

தல அஜித் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் 'திரௌபதி' படத்தை பார்த்து ரசித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

30 வயது பெண்ணுடன் 14 வயது சிறுவன்: கொலையில் முடிந்த கள்ளக்காதல்

30 வயது பெண் ஒருவருடன் 14 வயது சிறுவன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கள்ளக்காதல் கொலையில் முடிந்த சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.