31 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த இளையராஜா-பாரதிராஜா.. என்ன படம் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில் கடந்த 31 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணி புரிகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாரதிராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்றும் பாரதிராஜா இயக்குனர் ஆக அறிமுகமான ’பதினாறு வயதினிலே’ திரைப்படத்திலிருந்து அவர் இயக்கிய 11 படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில் தற்போது மீண்டும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா மற்றும் இளையராஜா ஒரே படத்தில் இணைந்து பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ளதாகவும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

இது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.. நடிகை ரம்யா பாண்டியனின் அழகான புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.  

ராம்சரண் தேஜா கொடுத்ததாக கூறப்படும் வைர மோதிரம்.. தமன்னா விளக்கம்..!

 நடிகை தமன்னாவுக்கு பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மனைவி உபாசனா வைர மோதிரம் பரிசளித்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

மண்பானை செய்யும் குயவராக மாறிய அமலாபால்.. க்யூட் வீடியோ..!

நடிகை அமலாபால் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சூர்யா-சுதா கொங்காரா படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ.. மாஸ் தகவல்..!

 சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு பிரபல ஹீரோவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதான் கேர்ள்ஸ் ட்ரிப்.. செம ஜாலியாக ஆட்டம் போடும் சமந்தா.. வைரல் வீடியோ..!

நடிகை சமந்தா தனது தோழியுடன் இந்தோனேசியா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தோழியுடன் செம ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது