30 வருடத்திற்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் அமலா: இயக்குனர், ஹீரோ யார்?

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘சத்யா’, ‘வெற்றி விழா’ பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்’, ‘இல்லம்’, ‘நாளைய மனிதன், சத்யராஜூடன் ‘ஜீவா’ வேதம் புதிது உள்பட பல முன்னணி நடிகர்களுடன் கடந்த 80கள், 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அமலா.

கடந்த 1991ஆம் ஆண்டு ’கற்பூர முல்லை’ என்ற படத்தை அடுத்து அவர் தமிழில் வேறு படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படத்தில் நாயகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி ரிதுவர்மா நடிக்கவுள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இந்த படத்தில்தான் ஒரு முக்கிய வேடத்தில் அமலா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எஸ்பிபி முதலில் பாடியது எனக்குதான், எம்ஜிஆருக்கு அல்ல: சிவகுமார்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருடன் பழகிய நாட்கள், நேர்ந்த அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள்

சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரபல வில்லன் நடிகர்: வீடியோ வைரல்

கடந்த சில வாரங்களாக திரையுலகினர் இடையே கிரீன் இந்தியா சேலன்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது என்பது தெரிந்ததே,

அஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் ஹாலிவுட் கலைஞர்: பரபரப்பு தகவல்

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இண்டர்போல் அதிகாரி கேரக்டரில் நடித்து வரும் அஜீத்துக்கு

அவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை, ஆனால் எனக்கும் உரிமை இருக்கிறது: எஸ்பிபி குறித்து விஜய்சேதுபதி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

கொரோனா நேரத்தில் அலுவலகங்கள் அதிக ஆபத்தானவை ஏன்??? விஞ்ஞானிகளின் புது விளக்கம்!!!

கொரோனா நேரத்தில் சமூக இடைவெளி, தனிநபர் பாதுகாப்பு, முகக்கவசம், சானிடைசர் போன்ற வார்த்தைகள்