30 வருடங்களுக்கு பின் கே பாக்யராஜ் உடன் இணையும் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

30 வருடங்களுக்கு முன்பு கே பாக்யராஜ் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக கடந்த 90கள் மற்றும் 2000ல் இருந்தவர் கே பாக்யராஜ் என்பதும் இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் மட்டும் நடித்து வரும் கே பாக்யராஜ், ஒலிம்பியா மூவீஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்க உள்ளார்.

பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ’ராசுகுட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாக்யராஜ் - ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.