2ஜி தீர்ப்பு எதிரொலி: கனிமொழிக்கு புதிய பதவி தர ஆலோசனை

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

இன்று காலை வெளிவந்த 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், திமுக கூடுதல் புத்துணர்ச்சியுடன் உள்ளது. திமுக மீது அரசியல் பழி வாங்க போடப்பட்ட வழக்கு இது என்றும், திமுக மீதிருந்த ஒரே களங்கமும் நீங்கிவிட்டதாகவும் திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு கனிமொழிக்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்து அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளதாகவும், கனிமொழிக்கு துணைபொதுச்செயலாளர் பதவியை கொடுப்பது பற்றி ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்த சற்குண பாண்டியன் கடந்த ஆண்டு காலமானதை அடுத்து அந்த பதவியை கனிமொழிக்கு தருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.