'பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகிறதா 'லால் சலாம்'?: 28 ஆண்டுக்கு பின் ரஜினி ஏற்கும் கேரக்டர்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ என்ற திரைப்படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு கேரக்டரில் ரஜினிகாந்த், ’லால் சலாம்’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

28 ஆண்டுகளுக்கு முன் ’பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினி இஸ்லாமிய கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது தான் மீண்டும் அதே போன்ற ஒரு கேரக்டரில் அடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ’பாட்ஷா’ படத்துடன் கனெக்ட் ஆகுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.