28 வருடங்கள் கழித்து கார்த்திக் ஜோடியாக நடிக்கும் நடிகை: டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
28 வருடங்களுக்கு முன் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 1993ஆம் ஆண்டு ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த திரைப்படம் 'சின்ன ஜமீன்'. இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் 'தீ இவன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கார்த்திக் ஜோடியாக 28 ஆண்டுகள் கழித்து சுகன்யா நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெயமுருகன் என்பவர் இயக்கி வருகிறார்
இந்த படத்தின் கதைக்கு கார்த்திக் மிகவும் பொருத்தமானவர் என தான் கருதியதால் அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்ததாகவும் நீண்ட இடைவேளைக்குப்பின் சுகன்யா அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் சமுதாய கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு படம் என்றும், தீமைகளை அழிக்க கூடியவன் என்பதுதான் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்த்திகா, ஜான் விஜய், சிங்கம் புலி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இயக்குனர் ஜெயமுருகன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments