27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபுதேவா - கஜோல்.. 'வெண்ணிலவே' பாடல் இருக்குமா?
- IndiaGlitz, [Saturday,May 25 2024]
27 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து ஒரு படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபு தேவா, கஜோல், அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் ’மின்சார கனவு’. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது இந்த படம் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த டான்ஸ் மாஸ்டர் ஆகிய நான்கு தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து நடிக்கும் தெலுங்கு படம் ஒன்று உருவாகி வருகிறது. சரண்தேஜ் உப்பிலபதி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அதிரடி த்ரில்லர் கதை அம்சம் கொண்டது என்றும் இதில் சம்யுக்தா மேனன், நஸ்ருதீன் ஷா, சென்குப்தா, ஆதித்யா ஷீல் உள்பட பலர் நடித்து வருவதாகவும் தெரிகிறது.
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 27 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’மின்சார கனவு’ படத்தில் ’வெண்ணிலவே’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றதை அடுத்து, அதே போன்ற ஒரு பாடலை இந்த படத்திலும் வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.