யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே பாடல்.. 'தளபதி 68' படத்தில் பாடுவாரா?

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68 படத்தின்’ அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ’புதிய கீதை’ என்ற படத்திற்கு பிறகு விஜய்யின் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



மேலும் கடந்த சில வருடங்களாக விஜய் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ’தளபதி 68’ படத்தில் யுவன் இசையில் அவர் ஒரு பாடலை பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் இசையில் உருவான ’புதிய கீதை’ திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தாலும் அந்த படத்தில் அவர் ஒரு பாடலையும் பாடவில்லை. ஆனால் அதே நேரத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ’வேலை’ என்ற படத்தில் யுவன் கம்போஸ் செய்த ’காலத்துக்கேத்த ஒரு கானா’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதும் அந்த பாடலை விஜய்யுடன் நடிகர் நாசர் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



25 ஆண்டுகளுக்கு பின்னர் யுவன் இசையில் ’தளபதி 68’ படத்தில் விஜய் பாடுவாரா? அவ்வாறு பாடினால் அந்த பாடல் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமன்னா.. 10 கிலோ எடை குறைந்ததா? வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து 10 கிலோ எடையை குறைக்க இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழு வாழ விடு.. அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு: 

 நடிகர் அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள அறிக்கை சற்றுமுன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கைகள் அஜித்குமார் கூறியிருப்பதாவது: 

மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடலாசிரியர்.. நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல பாடலாசிரியர் தனது மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெகிழ்ச்சியான பதிவு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் அசத்தும் 5 நடிகைகள்… யாரென்று தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம்வரும் பலர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அட… நடிகை ரம்பா மாதிரியே இருக்காங்களே… மகள் புகைப்படத்தால் வியந்த ரசிகர்கள்

90 களில் வெளியான தென்னிந்திய சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரம்பா தன்னுடைய மூத்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்