25 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Saturday,January 04 2025]

கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினியின் சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில், அந்த படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில், 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’படையப்பா’. இந்த படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தென்னிந்திய பிலிம் பேர் விருது மற்றும் தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றது.

’பாட்ஷா’விற்கு அடுத்து இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ள ’படையப்பா’, தற்போது மீண்டும் ரீரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவேறும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'படையப்பா’ ரீரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள் அந்த தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

இந்த வாரமும் டபுள் எவிக்சன்.. இருவருமே வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்,   கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்சன் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில்: ராமாயண வரலாற்றின் சாட்சி

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில், ராமாயண காலத்தின் ஒரு முக்கியமான சின்னமாகத் திகழ்கிறது.

சத்தமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்.. நீண்ட நாள் காதலரை கைப்பிடித்தார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் மற்றும் தமிழ் நடிகை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஷால் படம்.. மகிழ்ச்சியுடன் அறிவித்த சந்தானம்..!

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் ஏற்கனவே 9 படங்கள் இருக்கும் நிலையில், தற்போது பத்தாவது படமாக விஷால் நடித்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது

பெண்களின் பாதுகாப்பு: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..!

பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என இன்று வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு