23 வருடத்திற்கு பின் 'ரமணா' லொகேஷனில் 'SK23': ஏஆர் முருகதாஸின் நெகிழ்ச்சி பதிவு..!
- IndiaGlitz, [Sunday,March 24 2024]
23 வருடத்திற்கு முன் கேப்டன் விஜயகாந்த் நடித்த ’ரமணா’ படத்தின் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் மீண்டும் ’எஸ்கே 23’ படத்திற்காக படப்பிடிப்பு நடைபெறுவதாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2002 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ’ரமணா’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடப்பட்டது
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள ஒரு ரயில்வே நிலையத்தில் படமாக்கப்பட்டது என்பது அதில் விஜயகாந்த் தனது முன்னாள் மாணவர்களை சந்திக்கும் முக்கிய காட்சி படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதே ரயில் நிலையத்தில் தற்போது 23 ஆண்டுகள் கழித்து ’எஸ்கே 23’ படத்திற்காக படப்பிடிப்பு நடத்தினோம் என்றும் மீண்டும் தனக்கு பழைய நினைவுகள் வந்ததாகவும் ஏஆர் முருகதாஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’மிஸ் யூ கேப்டன்’ என்று அவர் ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிக்கும் இந்த படம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு ஏஆர் முருகதாஸ், சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.