22 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸாகும் நடிகர் விஜய் நடித்த ஹிட் திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
22 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காதல் ஹிட் திரைப்படம் ஒன்று தற்போது மீண்டும் கேரளாவின் திருவனந்தபுரம் தியேட்டரில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. ரசிகர்களை மிகவும் ஈர்த்த இந்தத் திரைப்படம் தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்றே ரசிகர்கள் கணித்துள்ளனர்.
அறிமுக இயக்குநராக இருந்த எழில் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சிம்ரன் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “துள்ளாத மனமும் துள்ளும்“. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படமாகவும் காதலர்களை மிகவும் ஈர்த்த திரைப்படமாகவும் பார்க்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் 100 நாட்களை கடந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது.
சூப்பர் ஹிட் அடித்த இந்தத் திரைப்படம் அப்போதே 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதையடுத்து மலையாள ரசிகர்களிடையே “துள்ளாத மனமும் துள்ளும்“ திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி 125 நாட்களை கடந்து ஓடியது. தற்போது 22 வருடங்களைக் கடந்து மீண்டும் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திருவனந்தப்புரத்தில் உள்ள கலாபவன் தியேட்டரில் இந்தத் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. காதலை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் தற்போதுள்ள சூழலுக்கும் பொருந்தும் என்றே வெளியீட்டாளர்கள் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
After 22 Years First Time Re-Releaseing evergreen's favourites of everyone ~ #ThullathaMamamumThullum will be Re-released on Dec 19th by Kerala Vijay Fans!! ❤️@KVFC_Official @Actorvijay #Beast pic.twitter.com/lgw7SBZtOM
— Simran (@SimranbaggaOffc) December 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments