21 வருடங்களுக்கு பின் மீண்டும் விஜய்க்கு தம்பியாகும் தமிழ் ஹீரோ.. வேற லெவல் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த தமிழ் ஹீரோ 21 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்தில் இணைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு விஜய், ரீமாசென் நடிப்பில் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பகவதி’. இந்த படத்தில் விஜய் தம்பியாக ஜெய் நடித்திருந்தார் என்பதும் நடிகர் ஜெய்க்கு இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து ‘சுப்பிரமணியபுரம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஜெய் தற்போது 21 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் அவர் விஜய்யின் தம்பியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘சென்னை 600028’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘பிரியாணி’, ‘மாஸ் என்ற மாசிலாமணி’, ‘பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் ‘தளபதி 68’ படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments