21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கமல்-ரஜினி.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரவர் இல்லத்தில் சந்தித்த நிகழ்வுகள் குறித்து செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இன்று அபூர்வமாக நடந்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு ஆகிய இரண்டும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இன்று நடந்தது.

இந்த நிலையில் இருவரும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் 21 ஆண்டுகள் கழித்து படப்பிடிப்பில் சந்திப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறிய காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதுகுறித்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை கமல், ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More News

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகிறதா? இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம்  நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

'ஏகே 63' படத்தை தயாரிக்க இருப்பது இந்த பிரபல நிறுவனமா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 63 வது படமான 'விடாமுயற்சி' படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி

'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா.. அதிர்ச்சி தகவல்..

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது

அடுத்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர் இவரா?  பிக்பாஸ் வீட்டில் செம ட்விஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள் குறித்த காட்சிகள் உள்ளன.

'லியோ' உள்பட 5 தமிழ் திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் விஜய் நடித்த