20 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் யுவன்... இதற்கு முன் எந்த படத்தில் இணைந்தார்கள் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பாராத தகவல் ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களுக்கு ஏஆர் ரகுமான், அனிருத், தேவிஸ்ரீ பிரசாத், ஜிவி பிரகாஷ் ஆகியோர்கள் தான் இசையமைத்து வந்தனர். இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு கேபி ஜெகன் என்பவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’புதிய கீதை’ என்ற திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஜய் மீரா ஜாஸ்மின் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது மட்டும் இன்றி இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்தது.
இந்த நிலையில் சரியாக 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது ’தளபதி 68’ படத்தில் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளதால் மீண்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் கொண்ட ஆல்பம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sooo happy to collaborate with @actorvijay after a looooong time 😊 Super excited... This is 🔥🔥🔥#Thalapathy68@Ags_production @vp_offl @archanakalpathi @Jagadishbliss @aishkalpathi @venkat_manickam @onlynikil @RIAZtheboss pic.twitter.com/7VMTnTXtgE
— Raja yuvan (@thisisysr) May 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments