மீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோடி' படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்க அந்த படத்தில் அவருடைய தோழிகளில் ஒருவராக ஒரு சின்ன கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார். அதன்பின் த்ரிஷாவும் பெரிய நாயகியாக மாறியவுடன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்த ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தில் சிம்ரன், த்ரிஷா இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் சேர்ந்த காட்சி அந்த படத்தில் இல்லை. த்ரிஷா பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே தோன்றுவார்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளனர். முழுக்க முழுக்க சிம்ரன், த்ரிஷா இணைந்த காட்சிகளுடன் கூடிய இந்த படத்தை சனந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 

More News

பாலாவின் 'வர்மா' படம் வெளியாகாது! அதிர்ச்சி அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் வெளியாகாது என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சித்தார்த் படத்தில் இணைந்த 2 பிரபல இசையமைப்பாளர்கள்

ஒரு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஒரு பாடலை பாடும் டிரெண்ட் கோல்வுட்டில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

'விஜய் 63' படத்துடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 63' திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்பதும் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார்

இளையராஜா மகளுக்கு நன்றி கூறிய பிரபல இசையமைப்பாளர்

இசைஞானி இளையராஜா மட்டுமின்றி அவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே

அடல்ட் காமெடி பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார்,