20 வருடங்களுக்கு பின் மீண்டும் அமிதாப்புடன் நடிக்கும் தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
தமிழ்வாணன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் அமிதாப் ஒரு ஆன்மீக பெரியவராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் இணைந்ததை இயக்குனர் தமிழ்வாணன் உறுதி செய்துள்ளார்.
கடந்த 1988ஆம் ஆண்டு அமிதாப் நடித்த 'Bade Miyan Chote Miyan' என்றா இந்தி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதன்பின் 20 வருடங்களுக்கு பின் மீண்டும் அமிதாப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com