20 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

சூர்யா நடிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் ராஜ்கிரண் இணைந்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ’நந்தா’ திரைப்படத்தில் நடித்திருந்த ராஜ்கிரண் மீண்டும் 20 வருடங்கள் கழித்து சூர்யாவின் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.