close
Choose your channels

ரஜினியின் '2.0' படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த 'பிகில்'

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெகு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

‘பிகில்’திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’2.0’ படத்திற்கு அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்தது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘2.0’ திரைப்படத்தின் பட்ஜெட் ரூபாய் 570 கோடி என்ற நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய பட்ஜெட் படமாக ரூபாய் 180 கோடியில் தயாரான படமாக ‘பிகில்’ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நயன்தாரா, ஏ ஆர் ரகுமான், அட்லி உள்பட பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்ற உள்ளதால் அவர்களது சம்பளமே இந்த படத்தின் பாதி பட்ஜெட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மகளிர் கால்பந்தாட்டப் போட்டி குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படங்களை அடுத்து விஜய்-அட்லீ இணையும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடியாக இருந்த போதிலும் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் பட்ஜெட்டையும் தாண்டி அதிக லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment