18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகர்.. 'கோட்' படத்தில் இன்னொரு வில்லன்..!

  • IndiaGlitz, [Friday,May 03 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் மீண்டும் ஒரு நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரசாந்த், மோகன், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் யுகேந்திரன் நடித்து வருவதாகவும் அவரும் வில்லன்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் மற்றும் யுகேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு நடந்தது என்னை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா? என்று நினைத்த போது அவர் என்னை அழைத்து நாம் இருவரும் இணைந்து நடித்தது 15 வருடத்திற்கு முன்பு அல்ல 18 வருடங்களுக்கு முன்பு என்று அவர் கூறியதோடு ’திருப்பாச்சி’ தான் நாம் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் என்று கூறி என்னை அசத்தினார்.

அவருடைய ஞாபக சக்தியை பார்த்து நான் அசந்து விட்டேன் என்றும் என்னிடம் அவர் அன்று போலவே இன்றும் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தான் வில்லன்களில் ஒருவராகவும் நடித்துள்ளதாகவும் யுகேந்திரன் கூறியுள்ளார்.

More News

அட்லீஸ்ட் விக்கிபீடியாவை பார்க்க கூடாதா? நவ்யா நாயர் வீட்டில் குழப்பம் ஏற்படுத்திய நிகழ்ச்சி..!

நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால் என்னை பற்றிய விவரங்களை என்னிடமே கேட்டிருக்கலாம், குறைந்தபட்சம் விக்கிபீடியாவை

அரசியலுக்கு வருகிறாரா ஜோதிகா? ஏன் ஓட்டு போடவில்லை.. அவரே அளித்த விளக்கம்.!

நடிகை ஜோதிகாவிடம் ஏன் ஓட்டு போடவில்லை என்றும் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்றும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

விஜயகாந்த் நினைவிடம் சென்ற இடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி.. நடமாடும் கர்ணனாக  மாறிய கேபிஒய் பாலா..!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா அவ்வப்போது பொதுமக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சென்னையில்

கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை.. ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டாந்தரையில் படுத்து கொண்டே பாரதியார் கவிதை படிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் கவின்? அவரே சொன்ன தகவல் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.