18 ஆண்டுகள் கழித்து வெளியாகும் மணிரத்னம் இயக்காத திரைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 7 என ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான திரைப்படங்களை மணிரத்னம் அவர்களே இயக்கி வந்தார். ஆனால் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று 18 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது என்பதும் அந்த படம் ‘வானம் கொட்டட்டும்’ படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2002ஆம் ஆண்டு சுசிகணேசன் இயக்கிய ‘பைவ்ஸ்டார்’ என்ற திரைப்படம்தான் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்காத படமாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல், மதுசூதன ராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தனா இயக்கியுள்ளார். சித் ஸ்ரீராம் இசையில் ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவில் சங்கத்தமிழன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

More News

சென்னையில் 68 பேருக்கு கரோணா வைரஸ் பாதிப்பு அறிகுறி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! தமிழக சுகாதார செயலாளர்.

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மாலையுடன் முடிவடைந்து நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார்.

டெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற சாய்னா, அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அருன் சிங் முன்னிலையில், தனது சகோதரி சந்த்ரான்ஸ்ஷுவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

கரீபியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கியூபா, ஜமைக்கா உள்ளிட்ட சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

CAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..!

கேரள சட்டப்பேரவையில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விமர்சித்த ஆளுநர் ஆரிப் முகமது கானை குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என கேரள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.