16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல இயக்குனரால் கிராமத்துக்கு திரும்பும் சிம்பு!

சிம்பு நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நகரத்து கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய ’கோவில்’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இருந்தது. அதன் பின்னர் சிம்புவின் படங்களில் ஒருசில காட்சிகள் கிராமத்தில் படமாக்கப்பட்டதாக இருந்தாலும் முழுக்க முழுக்க கிராமத்து கதையில் சிம்பு நடிக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் கூறிய கிராமத்து கதை ஒன்று சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் ’மாநாடு’ படத்தை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

More News

சென்னை கல்லூரி மாணவி திடீர் தற்கொலை: செல்போன் காரணமா?

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை

'எவனென்று நினைத்தாய்' டைட்டில் இல்லை: உண்மையான டைட்டில் இதுதான்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

80, 90களின் பிரபல நடிகருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 80ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராமராஜன். 'கரகாட்டகாரன்' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில்

இருவருக்குமே இரண்டு வேடங்களா? விஜய்சேதுபதி-டாப்ஸி படம் குறித்த ஆச்சரிய தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை டாப்சி ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும்

வெளியானது ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம்: இணையதளங்களில் வைரல்!

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும்