close
Choose your channels

15 ஆண்டுக்கு பின் ஜீவாவுக்கு ஒரு 2ஆம் பாக படம்.. ஆனால் இது நடக்குமா?

Saturday, October 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 15 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

ஜீவா மற்றும் அனுயா நடிப்பில், எம். ராஜேஷ் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’சிவா மனசுல சக்தி’ திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பணிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குனர் ராஜேஷ், "சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான திரைக்கதையையும் எழுதி வருகிறேன். ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருக்கிறேன்," எனத் தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில், முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில், ’சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment