14 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் மீண்டும் த்ரிஷா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று ’தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்கும் எட்டு நட்சத்திரங்களின் அதிரடி அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பிரபல இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், பிரபல நடிகர் மாத்யூ தாமஸ், பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு இன்றும் தொடரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா இந்த படத்தில் இணைந்திருப்பதை பட குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து 'கில்லி’ ’திருப்பாச்சி’ ’ஆதி’ மற்றும் ’குருவி’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படக்குழுவினர் இதற்கு முன் விஜய், த்ரிஷா நடித்த படங்களின் காட்சிகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தளபதி 67 படத்தில் இணைவது குறித்து த்ரிஷா கூறியதாவது: எனக்குப் பிடித்த குழுவினர் மற்றும் அபாரமான திறமையான குழுவில் நானும் ஒரு பகுதியாக இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இனி வரும் காலங்கள் உற்சாகமானது’ என்று தெரிவித்துள்ளார்.

More News

ராஜ்&டிகே வெப்தொடரில் இருந்து சமந்தா விலகலா? முக்கிய அறிவிப்பு!

 'தி பேமிலி மேன்' என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ்&டிகே  இயக்கத்தில் உருவாகும் அடுத்த வெப் தொடரில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. 

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா? பட்ஜெட் ரூ.200 கோடிக்கும் மேல்?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 62' படத்தின் பட்ஜெட்டும் ரூ.200 கோடிக்கு அதிகம்

ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்!

7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்றும்,  ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை

இப்படி எந்த நடிகையாவது செய்ய முடியுமா? வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

தமிழ் திரை உலகின் நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் இது மாதிரி இன்றைய நடிகைகள் யாராவது வொர்க்-அவுட் செய்ய

திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம்.. சூர்யா பட நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள்..!

சூர்யா படத்தில் நடித்த நடிகைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணமான நிலையில் இரண்டே மாதத்தில் கர்ப்பமானார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி தற்போது நடந்துள்ள நிலையில்