13 வருடங்களுக்கு பின் கமல்-ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்?

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினியும் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சினிமாவிலேயே எனது பாணி வேறு, கமல் பாணி என்று ரஜினி கூறியுள்ளதால் இருவரும் தனித்தனி பாணியில் அரசியல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியலில் மட்டுமின்றி மீண்டும் சினிமாவிலும் ஒரே நாளில் ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே தேதியில் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ஒரே நாளில் ரஜினி-கமல் படங்கள் ரிலீஸ் ஆனதன் பட்டியல் இதோ:

1.தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே (1983)
2.நல்லவனுக்கு நல்லவன் – எனக்குள் ஒருவன் (1984)
3.நான் சிகப்பு மனிதன் – காக்கி சட்டை (1985)
4.படிக்காதவன் – ஜப்பானில் கல்யாணராமன் (1985)
5.மாவீரன் – புன்னகை மன்னன் (1986)
6.மனிதன் – நாயகன் (1987)
7.வேலைக்காரன் – காதல் பரிசு (1987)
8.மாப்பிள்ளை – வெற்றி விழா (1988)
9.பணக்காரன் – இந்திரன் சந்திரன் (1990)
10.தளபதி – குணா (1991)
11.பாண்டியன் – தேவர் மகன் (1992)
12.பாஷா – சதி லீலாவதி (1995)
13.முத்து – குருதி புனல் (1995)
14.சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

13 வருடங்களுக்கு பின் கமல், ரஜினி ஆகியோர் தங்கள் ரசிகர்களுக்கு கொடுக்கும் இந்த சர்ப்ரைஸில் முந்துவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்